வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் இறகு பந்து பயிற்சி பெற விரும்புவோர் பங்கேற்கலாம். இதற்கான உடல் தகுதி தேர்வு 28-ஆம் தேதி காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. உடல்தகுதித் தேர்வில் பங்கேற்போர் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.