வேலூர் காட்பாடி அடுத்த கல் புதூர் பகுதியில் உள்ள MRM சிக்கன் சென்டரில் வாங்கிய சிக்கன் பக்கோடாவில் முழு ஒன்று வறுத்தெடுக்கப்பட்ட நிலையில் இருந்ததாக செவிலியர் அர்ச்சனா என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், "டியூட்டி முடித்துவிட்டு வரும்போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்தேன். குழந்தைங்க சாப்பிட்டு இருக்கும் போது, சிக்கன் பக்கோடாவுல புழு இருந்தது. இதை சாப்பிட்டு இருந்தா குழந்தைகளுக்கு என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. நல்ல உணவு கொடுப்பாங்கன்னு தான் ஹோட்டலுக்கு போறோம். இந்த மாதிரி எல்லாம் நடந்தா எப்படிங்க சார், " என்று உள்ளது.
இது தொடர்பாக கடை உரிமையாளர் முரளியைதொடர்பு கொண்டு கேட்டபோது, "நீங்கள் சொல்லித்தான் இந்த தகவலை எனக்கு தெரியும். இதுகுறித்து எங்களிடம் யாரும் கேட்கவில்லை. அதேபோல பழைய கறியை பயன்படுத்துவதில்லை, "என்றார்.