ஃபோன் சுவிட்ச் ஆப்: சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

54பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). சமையல் மாஸ்டரான இவர் ஆரணி அருகே உள்ள களம்பூர் கஸ்டம்பாடி பகுதியில் உள்ள முருகன் ஹோட்டல் என்ற கடையில் வேலை செய்து வந்துள்ளார். வார இறுதி நாட்களில் மட்டும் மேல்நெல்லி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று வரும் ஆனந்தன் கடைசியாக கடந்த சிலநாட்களுக்கு முன் தொலைபேசியில் உறவினர்களிடம் பேசியுள்ளார்.

மறுநாள் காலை உறவினர்கள் ஆனந்தனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, "பெண் ஒருவர் போனை அட்டென்ட் செய்து ஆனந்தன் வேலை செய்து கொண்டிருக்கிறார், " என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டதாகவும் பலமுறை, ஆனந்தனின் செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்ததாகவும் ஆனந்தனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்வதறியாமல் பதறிப்போன உறவினர்கள், களம்பூர் கஸ்டம்பாடி பகுதிக்கு சென்று கணவர் பணிபுரிந்த ஹோட்டலில் விசாரித்த போது சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். அங்கிருந்த மக்களிடம் ஆனந்தன் குறித்து உறவினர்கள் விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் சாலையோரம் ஆனந்தன் இறந்த நிலையில் இருப்பது தெரிந்துள்ளது.

பின்னர், மருத்துவமனையில் உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டு ஆனந்தன் சாலையோரம் வீசப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து உடலை வாங்காமல் சென்றுவிட்டனர்.

தொடர்புடைய செய்தி