போக்குவரத்து காவல் பயிற்சி பெற்றவர்களுக்கு எஸ் பி பாராட்டு

72பார்த்தது
வேலூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து இரண்டு மாதங்கள் நடைபெற்ற பயிற்சியினை நிறைவு செய்ததுடன் இரண்டு மாதங்களாக போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போக்குவரத்து காவல்துறையோடு இணைந்து பணியாற்றியதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என். மணிவண்ணன் அவர்கள் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
கூடுதல் கண்காணிப்பாளர் என். கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
வேலூர் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவரும் போக்குவரத்து காவல் குழும துணைத் தலைவருமான எஸ் ரமேஷ்குமார் ஜெயின் வரவேற்ற பேசினார்.
வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெ. அறிவழகன், போக்குவரத்து காவல் குழும செயலாளர் டாக்டர் அ. மு இக்ராம் துணைத் தலைவர் ஆர். சீனிவாசன் உறுப்பினர்கள் செ. நா. ஜனார்த்தனன் டாக்டர் வி. தீனபந்து பி. என். ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

தொடர்புடைய செய்தி