வேலூர் கலெக்டர் ஆபீசில் பயங்கரமாக மோதிக்கொண்ட கிராம மக்கள்

64பார்த்தது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அகரம் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பன்பட்டி கிராமத்தில் ஆடி மாத இறுதியில் முனீஸ்வரன் திருவிழா நடைபெறும். இந்தப் பகுதியில் ஒரே சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுமார் பத்து குடும்பங்கள் உள்ளன. ஊருக்குள் 250 குடும்பங்கள் உள்ளன. திருவிழாக்களின் போது கரகங்கள் மற்றும் தேரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பத்து குடும்பங்களின் வீடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஊருக்குள் உள்ள தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் இரு தரப்பினர் இடையே சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பூசாரியின் கருத்தை கோட்டாட்சியர் கேட்டுள்ளார். அதைக் கேட்டுக்கொண்ட கோட்டாட்சியர், "சாமி என்பது அனைவர்களுக்கும் பொதுவானதுதான். இருப்பினும் எல்லை முனியப்பன் சுவாமி ஊரை தாண்டக் கூடாது என்பது ஊர் வழக்கம் என பூசாரி தெரிவித்துள்ளார். அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்"எனத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கீழே வந்த இரு தரப்பில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள எதிர் தரப்பினர், மற்றொரு கோஷ்டி தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி