மனுக்கள் மீது விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

65பார்த்தது
மனுக்கள் மீது விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (செப்.16) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அளித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்திய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி