வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு காலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது
மலைக்கோயில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு விபத்தி காப்பு வெள்ளி கவசம் சத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
மலை அடிவாரத்தில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது
கீழ் கோயிலில் உள்ள மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சந்தன காப்பு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா வேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.