ஆலங்காயம் அருகே பொதுமக்கள் போராட்டம்!

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 ஏரிகளில் இருந்து நீரை கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு கோமுட்டேரி பகுதியில் சாலையோரம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து அதற்கு பேரூராட்சி சார்பில் ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்த இட அளவீடு செய்வதற்காக பேரூராட்சி அலுவலர்கள் கொமுட்டேரி பகுதிக்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இங்கு குப்பைகள் கொட்டினால் துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீர் தன்மை மாறிவிடும், இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுவதுடன் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும், பசுமையாக இருக்க வேண்டும், சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று கூறும் தமிழக அரசே நோய் பரவ காரணமாக இருப்பதா என்று குற்றச்சாட்டு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இங்கு குப்பைகள் கொட்ட அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி