திதிருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்து வந்தது. மதிய நேரத்திற்கு மேல் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து உள்ளதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கல்லூரி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.