மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 13ஆம் தேதி 'No Bra Day' கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு 14 விநாடிக்கும், இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் பெண் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நாளில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.