ஆந்திராவின் கர்னூர் அருகே தேவரக்கட்டு பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் பிரபல பன்னி திருவிழாவில், கிராமத்தினர் மோதிக்கொள்ளும் சடங்கில் 70 பேர் காயமடைந்தனர். திருவிழாவின் முக்கிய அம்சமான சண்டையிடும் சடங்கில், இந்த ஆண்டு 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல கிராமத்தினர் குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.