திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி சீர்கேட்டை கண்டித்தும் , அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முழு நேரமாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் முல்லை தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு நகராட்சி சீர்கேட்டை கண்டித்தும், மக்கள் தொகைக்கு ஏற்ப காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதலாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும், கழிவு நீர் கால்வாய்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முழு நேரம் பணியாற்ற வேண்டும், ஆற்றுமேடு பகுதியில் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.