சிரியாவின் லடாகியா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் அறை உள்ளது. அந்த அறையில் உள்நாட்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, வெடிமருந்துகள் இருந்துள்ளது. இந்த வெடிமருந்து நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில், அடுக்குமாடி குடியிருப்பும் இடிந்தது. இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.