தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஜம்மிகுண்டா மண்டலத்தில் உள்ள பாப்பய்யபள்ளி கிராமத்தின் புறநகரில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் தலையில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களது இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இருவரின் சடலங்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.