ரூபாய் இலட்சனை மாற்றப்பட்டதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே 'ரூ' வை பெரிதாக வைத்திருக்கிறோம். தமிழை பிடிக்காதவர்கள் 'ரூ' என்பதை பெரிய செய்தியாக்கிவிட்டனர். கல்வி நிதி கேட்டபோதெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், 'ரூ' மாற்றப்பட்டதை பேசுகிறார்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.