உலகிலேயே அதிக வேகத்தில் ஓடும் ரயிலை சீனா வடிவமைத்துள்ளது. CR450 என இந்த ரயிலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏரோ டைனமிக் டிசைன், காற்று தடை கட்டுப்பாடு ஆகிய காரணங்களாலும், கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் போன்ற இலகுவான உலோகங்களாலும் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக 450 கி.மீ ஆக இதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.