திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஏரியூர் பகுதியில் தொடர் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அப்பொழுது நாட்றம்பள்ளி போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அங்கு கட்டை உருட்டும் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சார்ந்த ரமேஷ் 45, கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சார்ந்த குப்பன் 62 ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.