மைக்ரோ ஓவனில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

53பார்த்தது
*திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு*

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த
மாதப்பன் மகன் வெங்கடேசன் (28)
என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார்.

இந்த பேக்கரியில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சேகர் வயது 32 என்பவர் கடந்த ஆறு மாத காலமாக வேலை செய்து வருகிறார்

இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பேக்கரி கடையில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி