திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளின் வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் சுபாஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகள் வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய கோரிக்கைகளாக மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் மேலும் மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் வணிக உரிமை கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் செந்தில் முருகன் மற்றும் மாநில துணைத்தலைவர் ஞானசேகர், நிர்வாகிகள் வினோத், ஸ்ரீதரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்