*மோடி முதல் அண்ணாமலை வரை அனைவரையும் தரக்குறைவாக பேசும் முன்னாள் திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் ஒன்றிய பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு*
கடந்த சில தினங்களாக திமுகவின் முன்னாள் தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் பாரத பிரதமர் மோடி முதல் தமிழக மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் தரக்குறைவாக பேசும் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று திருப்பத்தூர் ஒன்றிய பாஜக சார்பாக மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து தலைமையில் திருப்பத்தூர் கிராமிய நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து கூறுகையில் குடியாத்தம் குமரன் திமுகவில் முன்னாள் தலைமை கழக பேச்சாளராக இருந்தார் அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பற்றி அவதூறாக பேசியதை தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் தற்பொழுது மீண்டும் தன்னை திமுகவில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் மோடி முதல் பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை வரை இடைப்பட்ட யாரையும் விட்டு வைக்காமல் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் திட்டி அசிங்கப்படுத்துகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.