காவேரிப்பாக்கம் அருகே அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை!

78பார்த்தது
காவேரிப்பாக்கம் அருகே அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை!
காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கவுதமன் (வயது 36). இவர் திருப்பாற்கடல் ரங்கநாதர் கோவில் நிர்வாகியாகவும், அர்ச்சகராகவும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராணிப்பேட் டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது கவுதமன் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :