பாப்பம்மாள் பாட்டி மறைவு: கமல் இரங்கல்

51பார்த்தது
பாப்பம்மாள் பாட்டி மறைவு: கமல் இரங்கல்
பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தனது ‘X’ தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “மக்கள் சேவையில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த பாப்பம்மாள் அவர்கள், 108 வயதில் இயற்கை எய்தினார். இந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி