சைவ உணவு முறைகளின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. சிந்து நாகரிகத்தில் சைவ உணவுகள் புழங்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் விளக்குகின்றனர். அதன்பிறகு நம் நாட்டில் வளர்ந்த பௌத்தமும், சமணமும் சைவ உணவு முறையை வலுவாக முன்னெடுத்தன. சமய சடங்குகளின் போது விலங்குகள் பலியிடப்படுவதை சமணர்களும், பௌத்தர்களும் கடுமையாக எதிர்த்தனர். இது சைவத்தை ஊக்குவித்தது. இவ்வாறாக நம் நாட்டில் பிறந்த இந்த சைவ உணவு முறை படிப்படியாக இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது.