பனப்பாக்கம் அருகே சிறுவனை ஏமாற்றி 13 ஆயிரம் பணம் திருட்டு!

84பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஒரு காலணி விற்பனை செய்யும் கடையில் இரு வட மாநில இளைஞர்கள் காலணி வாங்குவது போன்று வந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சிறுவனின் கவனத்தை திசை திருப்பி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 13 ஆயிரத்தை திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து கடையின் உரிமையாளர் நெமிலி காவல் நிலையத்தில் கேமரா பதிவுகளுடன் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி