பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம் 8 ஏப்ரல் 2015 அன்று பிரதமர் மோடியின் முதலாவது அரசில் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இந்தக் கடன்கள் முத்ரா (மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் அண்ட் ரிஃபைனான்ஸ் ஏஜென்சி லிமிடெட்) கடன்களாக வகைப்படுத்தப்படுகின்றன. வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், MFIகள் மற்றும் NBFCகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன.