உலகிலேயே மோசமான கெட்டப் பழக்கம் என்றால் அது கடன் வாங்குவதுதான் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசும் போது, "கடன் குறித்த ஆபத்து பலருக்கும் புரிவதில்லை. குடிப்பழக்கம் கூட தனிப்பட்ட நபரை தான் பாதிக்கும். ஆனால் கடன் வாங்குவது ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதிக்கும்" என கூறினார். ஹாரிஸ் ஜெயராஜ் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.