பயணிகளுடன் ரயிலை பலுசிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய சம்பவத்திற்கு இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான IS, பலுசிஸ்தான் மாகாண அரசு ஆகியவை ரயில் கடத்தல் மற்றும் பிற தீவிரவாத சம்பவங்களுக்கு இந்திய உளவு அமைப்பு 'ரா' நிதி உதவி செய்து, திட்டம்தீட்டி கொடுத்ததாக சாடியுள்ளன. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்தபோது, இந்தியா மறுத்திருந்தது.