ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவகி (வயது 62). மழையின் போது இவரது வீட்டின் முன் பக்கம் இருந்த இரும்பு கம்பி முழுவதுமாக நனைந்துள்ளது. தேவகி வீட்டை விட்டு வெளியே வந்தபோது இரும்பு கம்பி மீது கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.