அரக்கோணம்: பட்டா கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

59பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன்ஹால் நான்காவது தெருவில் பட்டா கத்தியுடன் நேற்று வாலிபர் ஒருவர் சுற்றித்திரிகிறார். மேலும் அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று பொதுமக்களை மிரட்டுவதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு வந்து வாலிபரிடம் நயமாக பேசி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பட்டிமேட்டை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி