சேலத்தில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை

63பார்த்தது
சேலத்தில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை
சேலம் எடப்பாடி அருகே பெரிய முத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சத்யா கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கூறி வந்தார். கடந்த 31ஆம் தேதி விஷத்தை குடித்துவிட்டு மயங்கினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று
மாலை உயிரிழந்தார். இது குறித்து கொங்கனாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி