வக்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. நேற்று மக்களவையில் நிறைவேறிய நிலையில் இன்று (ஏப்ரல் 04) மாநிலங்களவையிலும் நிறைவேறியது. 128 பேர் ஆதரவு அளித்த நிலையில், 95 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மசோதா மீது இன்று நள்ளிரவு வரை 2 மணி வரை விவாதம் நடந்தது. வக்பு வாரிய சொத்துக்களை மத்திய அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.