பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் காலமானார்

51பார்த்தது
பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான மனோஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 78. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் தனது திரையுலக வாழ்க்கையில் பல தேசபக்தி படங்களில் நடித்ததோடு, தானே இயக்கவும் செய்துள்ளார். கிராந்தி, உப்கார் போன்ற தேசபக்தி படங்கள் மூலம் பிரபலமானார். மனோஜ் இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி