கிரகங்களின் சாதகமான பெயர்ச்சி காரணமாக ஏப்ரல் மாதத்தில் 4 ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் ஏற்படவுள்ளது. கன்னி, மீனம், தனுசு, மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏற்றம் காணப்படும். பணித் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். சூரியன் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி உள்ளிட்டவை காரணமாக இம்மாதம் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, பணப்புழக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் வரும். நீங்கள் விரும்பியதைச் செய்யும் நேரம் கூடி வரும்.