குடியாத்தம் கே. எம். ஜி. கலை கல்லூரியில் வாழ்வியல் கருத்தரங்கு

79பார்த்தது
குடியாத்தம் கே. எம். ஜி. கலை கல்லூரியில் வாழ்வியல் கருத்தரங்கு
சென்னை காட் இந்தியா அறக்கட்டளை, குடியாத்தம் கே. எம். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சார்பில், மாணவர்களுக்கான வாழ்க்கை ஒழுங்கு நெறிமுறைகள் சார்ந்த வாழ்வியல் கருத்தரங்கு கே. எம். ஜி. கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சி. தண்டபாணி தலைமை தாங்கினார்.

கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜா. ஜெயக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காட் இந்தியா அறக்கட்டளை முரளிஜீ கலந்து கொண்டு "மாணவர்களுக்கு வாழ்க்கை ஒழுக்க நெறிமுறைகள்" என்ற தலைப்பில் வாழ்வியல் வளர்ச்சிக்கான கருத்துக்களை எடுத்துரைத்தார். முடிவில் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் த. மணிகண்டன் நன்றி கூறினார். இதில் கே. எம். ஜி. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளையின் குடியாத்தம் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், அருணாசலம், கிருஷ்ணா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி