தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!

551பார்த்தது
தமிழகத்தில் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நகர்ந்துள்ளதால் இம்மாதம் 27 வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெயும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் உள்ளிட்ட பகுதிகளின் மீது வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது காரணமாக கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்தது வரும் நிலையில் தற்போது அது விலகி உள்ளது. அதனால் தமிழகத்தில் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி