தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, குங்குமும் மஞ்சளுமாய் மங்களகரமான கொடி என பாஜகவின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கலகலப்பாக பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொள்கை வந்தபின் விவாதம் வரலாம், ஆனால் கொடிக்கு இப்படி செய்கிறார்கள். நல்லவேளை அந்தக் கொடியில் தாமரை இல்லை. இருந்திருந்தால் நாங்களும் கருத்து சொல்லியிருப்போம். உண்மையில் குங்குமும் மஞ்சளுமாய் மங்களகரமான கொடி அது” என்று தவெக-வின் கொடி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.