சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 50% பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், பேருந்து பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு சேவை சிறப்பாக இயங்க உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.