தரவுகளின்படி நாடு முழுவதும் தினமும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், "பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.