ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், யாருக்கும், எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை. போலீசார் கேட்ட விவரங்களுக்கு மோனிஷா உரிய விளக்கங்களை கொடுத்துள்ளார். கிருஷ்ணன் வங்கி கணக்கிற்கு மோனிஷா வங்கி கணக்கில் இருந்து பரிவர்த்தனை எனக்கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இயக்குநர் நெல்சன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான செய்தி பரப்பப்படுகிறது என மோனிஷா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.