தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது தான் பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரையில் தொண்டர்களிடையே உரையாற்றி அண்ணாமலை, "தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒரு பாறையை உருவாக்கி வைத்துள்ளனர். பாஜக அதை தகர்த்து வருகிறது. வெற்றியை முத்தமிடும் அளவுக்கு பாஜக மக்களை நெருங்கிவிட்டது. தீவிரமாக பணியாற்ற வேண்டும் யார் எதிராக வேலை செய்தாலும் பாஜக வளர்ச்சியை அணை போட்டு தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.