100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயணாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகார் - 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் - 3,36,375 பயனாளிகளும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நிறைய குளறுபடிகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.