பெண் ஒருவர் தனக்கு காதலை விருப்பமில்லை என தெரிவித்தும் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்துவதும் பாலியல் சீண்டலே என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மஹாராஷ்டிராவில் காதலிக்க மறுத்த சிறுமியை இளைஞர் ஒருவர் தினமும் பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் வழக்குப்பதிவு செய்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதோ போன்று யாருக்கு நடந்தாலும் வழக்கு தொடரலாம் என நீதிபதி கூறியுள்ளார்.