காலாவதியான உணவுகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை இருக்கும். அவை உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு உடல் உபாதைகளால் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். எனவே கடைகளில் வாங்கும் பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை கவனிக்க வேண்டும். காலாவதி தேதி கடந்த உணவுப் பொருட்கள் தரமற்றதாக அல்லது விஷமாக கூட மாறிவிடும்.