ஜென்மாஷ்டமி என்று சொல்லக்கூடிய கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யக்கூடிய சிலவற்றை பார்க்கலாம். இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனதார கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை நன்றாக குளிக்க வைத்து, அவற்றை அலங்கரிக்க வேண்டும். தட்டில் இனிப்புகள், பழங்கள் மற்றும் கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பொருட்களை சமர்பித்து வணங்க வேண்டும்.