அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) தொடரின் 5-வது சீசனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) தொடரின் வெற்றிக்கோப்பை அறிமுகப்படுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடரைத் தொடங்கி வைத்தார். 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் - ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.