காரில் தவெக கொடியை பறக்க விட்ட நிர்வாகி

1524பார்த்தது
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி இன்று (ஆகஸ்ட் 22) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கட்சி கொடியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி என்பவர் தனது காரில் இருந்த மக்கள் இயக்க கொடியை அகற்றி தவெக கொடியை பறக்கவிட்டார்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி