கமலஹாசன், சிவகார்த்திகேயன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!

4225பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமலஹாசன் மற்றும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இருவரின் உருவ பொம்மையை போலீசார் பறிமுதல் செய்து 20க்கும் மேற்பட்ட கட்சியினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி