கே. வி. குப்பம் அருகே புள்ளிமான் பலி

71பார்த்தது
கே. வி. குப்பம் அருகே புள்ளிமான் பலி
கே. வி. குப்பம் அருகே பசுமாத்தூர், கீழ்ஆலத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று, கோடை வெப்பம் காரணமாக தண்ணீர் தேடி பசுமாத்தூர் கிராமத்திற்கு வந்தது. இதையடுத்து அங்குள்ள பாலத்தின் கீழ் மர்மமான முறையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி வனச்சரக அலுவலர் கந்தசாமி உத்தரவின்பேரில், வனத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று, இறந்து கிடந்த மானை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழி தவறி வந்த மான் வாகனம் மோதி இறந்ததா? நாய்கள் துரத்திக் கடித்து இறந்ததா? என பல்வேறு கோணங்களில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி