குடியாத்தம் டவுன் சந்தப்பேட்டை அக்பர்சாயபு தெரு மற்றும் கூடநகரம் ரோட்டில் தெரு நாய்கள் அந்த வழியாக வாகனங்களில் சென்ற 8 பேரை விரட்டி விரட்டி கடித்துள்ளன. அதேபோல் கொண்டசமுத்திரம், பிச்சனூர் உள்ளிட்ட பகுதிகள் என நேற்று மட்டும் 13 பேரை நாய் கடித்துள்ளன. இவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.