கே வி குப்பத்தை எடுத்த தெம்மாங்குப்பம் கிராமத்தில் பொது இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடத்த இரு தரப்பினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை நீடித்து வந்தது இதனை தொடர்ந்து தாசில்தார் தலைமையில் கோவில் வளாகத்தில் அமைதி குழு கூட்டம் நடைபெற்றது அப்பொழுது தேர் இழுக்காமல் கோவிலுக்குள் விழா நடத்த அனுமதிக்கப்பட்டது கடந்த ஆறாம் தேதி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் திடீரென பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை அகற்றிவிட்டு மூலஸ்தானத்தில் இருந்த சிலையை எடுத்துச் சென்றுள்ளனர் இதுகுறித்து ஒரு தரப்பினர் புகார் அளித்தனர் இதற்கிடையே குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் அமைதி குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பப்பட்டது இந்த நிலையில் கோவில் இடிப்பு தொடர்பாக தேவ ரிஷி குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா கே வி குப்பம் போலீசில் புகார் அளித்திருந்தார் தெம்மாங்குப்பம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை சட்டப்பிரிவு பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்த ஊரை சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.